மீண்டும் வழமைக்குத் திரும்பும் மத்திய கிழக்கு விமான சேவைகள்

Published By: Vishnu

04 Mar, 2026 | 01:12 AM
image

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வான்பரப்பு குறிப்பிட்ட நேரத்திற்குத் திறக்கப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் இலங்கையிலிருந்து டுபாய் மற்றும் சார்ஜா நோக்கி விமானங்கள் பயணத்தைத் தொடங்கின.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் முதலாவது விமானம் டுபாய் நோக்கிப் புறப்பட்டது. பிட்ஸ் எயார் (Fits Air) நிறுவனத்திற்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம், பிற்பகல் 01.20 மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்தது. இதில் 47 பயணிகளும் 10 விமானப் பணியாளர்களும் பயணித்ததாக விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாலை 04.45 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான G-9509 என்ற விமானம் கட்டுநாயக்கவிலிருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 44 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

மத்திய கிழக்கு வான்பரப்பு தற்போது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் திறக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி விமானங்கள் இயக்கப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் ஏனைய விமான நிறுவனங்களும் தமது சேவைகளை படிப்படியாக வழமைக்குக் கொண்டுவரவுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54
news-image

அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்:...

2026-07-13 06:23:14
news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஓமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-13 12:29:24
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09