ஃபெயார்ஃபெர்ஸ்ட் இன்சூரன்ஸ் கிண்ண ரி20 அரை இறுதிகளில் மெக்லெரன்ஸ் குழுமம், பியகம MAS அக்டிவ், அன்செல் லங்கா, HNB அஷுவரன்ஸ்  

Published By: Vishnu

03 Mar, 2026 | 09:29 PM
image

(நெவில் அன்தனி)

ஃபெயார்ஃபெர்ஸ்ட் இன்சூரன்ஸ் லிமிட்டெடின் தொடர்ச்சியான  எட்டாவது  வருட அனுசரணையுடன் வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) நடத்தப்படும் ஃபெயார்ஃபெர்ஸ்ட் இன்சூரன்ஸ் கிண்ண எவ் பிரிவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி அரை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

16 வர்த்தக நிறுவன அணிகள் நான்கு குழுக்களில் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது நொக் அவுட் சுற்று நடத்தப்படுகிறது.

ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான இந்த சுற்றுப் போட்டியில் முதல் கட்டமான லீக் சுற்று பெப்ரவரி 15ஆம் திகதி நிறைவுபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாடி வந்தன.

முன்னோடி கால் இறுதிப் போட்டிகளும் கால் இறுதிப் போட்டிகளும் கடந்த வார இறுதியில்

நிறைவடைந்ததுடன் அரை இறுதிப் போட்டிகள் இந்த வார இறுதியில் எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் மெக்லெரன்ஸ் குழுமம் அணியும் பியகம MCA அக்டிவ் அணியும் மோதவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் பொட்டியில் அன்செல் லங்கா, HNB அஷுவரன்ஸ் ஆகிய அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

இறுதிப் போட்டி சிசிசி மைதானத்தில் மின்னொளியில் நடைபெறும். அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் சிரோஷ குணதிலக்க தெரிவித்தார்.

இந்த சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், இறுதி ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு விசேட பரிசுகள் வழங்கப்படும்.

லீக் சுற்றில் பங்குபற்றிய அணிகள்

ஏ குழு: சொஃப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸ், PABC, மெட்ரோபொலிட்டன் குழுமம், எய்ட்கன் ஸ்பென்ஸ், எஸ்ட்ரொன் லிமிட்டெட், மெக்லெரன்ஸ் குழுமம்

பி குழு: எமர்கெமி NB, பி. ஹனாத் பிளான்டேஷன் 'பி', சிலோன் டுபாக்கோ, ரன்பத் குழுமம், அன்சல் டெக்ஸ்டைல், SAGT

சி குழு:  கொமர்ஷல் வங்கி, கெமரா LK, சியாம் சிட்டி சிமென்ட், அன்செல் லங்கா, எம்பயர் டீ,  பியகம MAS எக்டிவ்

டி குழு: கொமர்ஷல்  கிரெடிட், அட்டயர் குழுமம்,  HNB அஷுவரன்ஸ், காமா பிஸ்ஸா கிராஃப்ட், ஈ பி க்றீசி, சிட்ரெக் குழுமம்

லீக் மற்றும் நொக் அவுட் போட்டிகளுக்கான அனுசரணை வழங்கும் நிகழ்வு வர்த்தக கிரிக்கெட் சங்க லெஜென்ட்ஸ் விங் கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப் போட்டிக்கான அனுசரணையை வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் சிரோஷ குணதிலக்கவிடம் ஃபெயார்ஃபெர்ஸ்ட் இன்சூரன்ஸ் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவிசங்கர் விக்னேஸ்வரன் வழங்கினார்.

இந் நிகழ்வில் ஃபெயார்ஃபெர்ஸ்ட் டிஜிட்டல், சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ தலைமை அதிகாரி கிளெமன்ட் பெர்னாண்டோபுள்ளே, ஆஊயு பொதுச் செயலாளர் அச்சின்த ஹேவாநாயக்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58