பிரியாணியை யார் பசியாற கூடாது..?

03 Mar, 2026 | 05:16 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினரும் ,மத்திம வயதுடையவரும் ..ஏன் முதிய வயது தொடும் நபர்களும் கூட விடுமுறை நாள் மட்டுமல்லாமல் நாளாந்தம் பிரியாணியை பசியாறுவதில் விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

இந்நிலையில் பிரியாணி அது சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் யார் பசியாற கூடாது என்பதை வைத்தியர்கள் பின்வரும் மருத்துவ ரீதியிலான காரணங்களை கூறி ண தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

பொதுவாக வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டவர்களும் , வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டு மருந்தியல் சிகிச்சையை பெற்றவர்களும் பிரியாணியை பசியாறுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் மசாலா ..குடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது.

இன்றைய சூழலில் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பிற்கு ஏராளமானவர்கள் முகம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிரியாணி பிரியர்களாகவே இருக்கிறார்கள்.

அதே தருணத்தில் வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கோப்பி மற்றும் தேநீர் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். அதிலும் எம்மில் பலர் காலையில் கண் விழித்ததும் சூடான தேநீரை அருந்துவது வழக்கம்.  இது வயிற்றுப்புண் பாதிப்பை மேலும் தூண்டுகிறது.

சந்தையில் விற்கப்படும் குளிர்பானங்களை பருகுவதிலும் அதிலும் குறிப்பாக குளிர்சாதன இயந்திரங்களில் பாதுகாக்கப்பட்டு குளிர்ந்த நிலையில் விற்பனை செய்யப்படும் கொர்பனேட்டட் குளிர்பானத்தை பருகுவதை தவிர்க்க வேண்டும்.

இதன் காரணமாகவும் வயிற்றுப்புண் பாதிப்பு மீண்டும் ஏற்படக்கூடும். இதைத் தொடர்ந்து நவீன விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும்.‌

இதனுடன் மது மற்றும் புகையை முற்றாக தவிர்த்திட வேண்டும். இதனை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் பாவிக்க தொடங்கினால் வயிற்றுப்புண் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் ஆகும்.

வயிற்றுப்புண் தொடர் சிகிச்சையும் தொடர் பராமரிப்பும் உணவு தொடர்பான நடைமுறையும் அவசியம். இதனை மீறும் போது மீண்டும் வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டு , விவரிக்க இயலாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

வைத்தியர் அருண் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31
news-image

சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான நவீன சத்திர...

2026-06-30 17:12:11