மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்த யோகி பாபு

03 Mar, 2026 | 05:03 PM
image

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கெணத்த காணோம் '  திரைப்படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவான 'கெணத்த காணோம்' திரைப்படத்தில் யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரெபாக்கா, ஜார்ஜ் மரியான், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலை பாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். கிராமிய மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக பேசும் இந்த திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக தயாரிப்பாளர்கள் ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் இயக்குநர்கள் சுசீந்திரன்- கரு. பழனியப்பன்- வசந்தபாலன்- ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் யோகி பாபு பேசுகையில், '' படத்தின் இயக்குநரான மறைந்த சுரேஷ் சங்கையா 'காக்கா முட்டை' படத்தில் இருந்து நான் அறிவேன். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் என்னை கதையின் நாயகனாக நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருந்தார். அந்த தருணத்தில் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. பிறகு சில காரணங்களால் அப்படத்தில் பங்கு பற்ற முடியவில்லை.

அந்தத் தருணத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அதனை நான் தற்போது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். கதைகளை அழகாக சொல்லக்கூடிய பெரும் திறமைசாலி. அவரை நாம் இழந்து விட்டோம் . இருந்தாலும் அவர் எப்போதும் நம்முடனேயே இருக்கிறார். இந்தப் படம் முருகன் அருளால் வெற்றி பெறும். வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் அறிவித்ததை போல் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா வாரிசுகளின் கல்விக்காக ஒரு நிதியை காசோலையாக மேடையில் யோகி பாபு  அவருடைய குடும்பத்தினரிடம் வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34