லெபனானில் கூடுதல் பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேலிய படைக்கு அனுமதி – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 05:03 PM
image

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கையில், தாமும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணைந்து, இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க லெபனானில் உள்ள கூடுதல் மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறுவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கு (IDF)க்கு அதிகாரம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், “லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாஹ் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தொடர்ந்து வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக அந்த அமைப்பு பெரும் விலையைக் கொடுத்து வருகிறது இனியும் கொடுக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ள கலிலேயா பகுதி சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பிராந்திய நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதுடன், பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43