சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 கால்பந்தாட்டத்தில் சம்பியன் பட்டத்திற்கு 6 அணிகளுக்கு இடையில் கடும் போட்டி

03 Mar, 2026 | 04:52 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திவரும் நடப்பு பருவகாலத்துக்கான சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 கால்பந்தாட்டம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் ஒவ்வொரு வார இறுதியிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சுப்பர் 8 சுற்றில் இரண்டு கட்டங்கள் மாத்திரம் மீதம் இருக்க, குருநாகல் பெலிக்கன்ஸ் கழகமும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் தோல்வி அடையாத அணிகளாக புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன. எனினும் சம்பியன் பட்டத்திற்கு 6 அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.

பெலிக்கன்ஸ் (11 புள்ளிகள்), ஜாவா லேன் (9), செரெண்டிப் (7), சோண்டர்ஸ் (6), சென். மேரிஸ் (6), சொலிட் (6) ஆகிய அணிகளில் ஒன்று சம்பியனாவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஐந்து புள்ளிகளுடன் 7ஆம் இடத்தில் இருக்கும் நியூ ஸ்டார் கழகத்திற்கு சம்பினாகக் கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. கடைசி இடத்தில் உள்ள பொலிஸ் கழகம் தரவரிசையில் முன்னேற முயற்சிக்க வேண்டிவரும்.

இந் நிலையில், இந்த வாரம் நடைபெறவுள்ள 6ஆம் கட்ட சுப்பர் 8 போட்டியில் பெலிக்கன்ஸ் கழகம் வெற்றிபெற்று ஜாவா லேன், செரெண்டிப் ஆகிய கழங்கள் தோல்விகளைத் தழுவினால் பெலிக்கன்ஸ் கழகம் சம்பியனாவது உறுதியாகும்.

ஏனேனில் பெலிக்கன்ஸ் கழகத்திற்கு 14 புள்ளிகள் கிடைப்பதுடன் மற்றைய இரண்டு அணிககளில் ஒன்றுக்கு அதிகபட்சமாக 12 புள்ளகளையே பெறமுடியும்.

ஒருவேளை, பெலிகன்ஸ் கழகம் தோல்வி அடைந்தால் மீண்டும் 6 அணிகளுக்கு இடையில் சம்பியன் பட்டத்துக்கான போட்டி நிலவும்.

அதேவேளை, பெலிகன்ஸ், ஜாவா லேன், செரெண்டிப் ஆகிய மூன்று கழகங்களும் வெற்றிபெற்றால் சம்பியன் பட்டத்துக்கு முக்கோணப் போட்டி நிலவும்.

எனவே அடுத்து வரும் போட்டிகள் ஆறு கழகங்களுக்கு வாழ்வா சாவா என்ற ஒரு போராட்ட நிலையை தோற்றுவிக்கவுள்ளது.

கடந்த வார போட்டி முடிவுகள்

குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வாரம் நடைபெற்ற 4 சுப்பர் 8 போட்டிகளில் சொலிட் கழகம் மாத்திரம் வெற்றிபெற்றது. மற்றைய 3 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன

பொலிஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் அற்புதமாக விளையாடிய அநுராதபுரம் சொலிட் கழகம் 3 - 1 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சொலிட் கழகம் சார்பாக ஸ்ரீமுரளிதரன் யபேஷ் (22 நி.), ஹென்றி சிபேஸ் (45+2 நி.), மென்சா பிறின்ஸ் (78 நி.) ஆகியோரும் பொலிஸ் கழகம் சார்பாக கயான் ரிவால்டோவும் (44 நி.) கோல்களைப் போட்டனர்.

சோண்டர்ஸ் கழகம் 10 வீரர்களுடன் நியூ ஸ்டார் போட்டியை சமப்படுத்தியது

நியூ ஸ்டார் கழகத்துக்கு எதிரான போட்டியில் 22ஆவது நிமிடத்திலிருந்து 10 வீரர்களுடன் விளையாடிய சோண்டர்ஸ் கழகம் எதிர்நீச்சல் போட்டு ஆட்டத்தை 3 - 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

நியூ ஸ்டார் கழகத்தின் கிழக்கு மாகாண நட்சத்திர வீரர் மொஹமத் தில்ஹாம் 6ஆவது (பெனல்டி), 43ஆவது நிமிடங்களில் கோல்களைப் போட்டு அணியை முன்னிலையில் இட்டார்.

இதனிடையே சோண்டர்ஸ அணித் தலைவர் இந்தீவ உதார 21ஆவது நிமிடத்தில் மத்தியஸ்தரின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்காகி வெளியேறினார்.

போட்டியின் 59ஆவது நிமிடம்வரை 0 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த சோண்டர்ஸ் கழகம் 60ஆவது நிமிடத்தில் ரொஜர் பிலிப் மூலம் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டது.

மொஹமத் தில்ஹாம் 64ஆவது நிமிடத்தில் தனது ஹெட் - ட்ரிக் கோலை பூர்த்தி செய்து நியூ ஸ்டார் கழகத்தை 3 - 1 என முன்னிலையில் இட்டார்.

ஆனால், விடாமுயற்சியுடன் விளையாடிய சொண்டர்ஸ் கழகம், ரொஜர் பிலிப் மூலம் மேலும் 2 கோல்களை (67 நி. பெனல்டி, 75 நி.) போட்டு கோல் நிலையை 3 - 3 என சமப்படுத்தியது. ரொஜர் பிலிப்பும் இப் போட்டியில் ஹெட் - ட்ரிக் முறையில் கோல் போட்டார்.

தொடர்ந்து இரண்டு அணிகளாலும் வெற்றி கோலை போட முடியாமல் போனது.

வெற்றிதோல்வி இல்லை

குருநாகல் பெலிகன்ஸ் கழகத்துக்கும் மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கும் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

பெலிக்கன்ஸ் சார்பாக டெனில் முசாட்கின் 11ஆவது நிமிடத்திலும் செரெண்டிப் சார்பாக ஒடூம் எனொக் 58ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்டனர்.

யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்துக்கும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகத்துக்கும் இடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

ஐந்தாம் கட்ட சுப்பர் 8 போட்டி

முடிவுகளுடன் அணிகள் நிலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-17 23:41:20
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57