லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது - வசந்த சமரசிங்க

03 Mar, 2026 | 04:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த மாதம் மாத்திரம் 38 ஆயிரம் மெற்றிக்தொன் எரிவாயு தொகை விநியோகிக்கப்படும். லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு  சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை  நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று வர்த்தகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   செவ்வாய்க்கிழமை (03)   நடைபெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய கிழக்கு நாடுகளில்  பதற்ற நிலைமை ஏற்பட்டவுடன்  நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.

2026 ஆம் ஆண்டுக்கு மாத்திரம்  3 இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக்தொன் எரிவாயு தொகையை இறக்குமதி செய்வதற்குரிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம்  24 ஆயிரம் மெற்றிக்தொன், பெப்ரவரி மாதம் 28 ஆயிரம் மெற்றிக்தொன் என்ற அடிப்படையில் எரிவாயு தொகை  கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் 38 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்யவுள்ளது. இம்மாதம் மாதம் 10 கப்பல்கள் ஊடாக எரிவாயு இறக்குமதி செய்யப்படும்.

தனியார் எரிவாயு நிறுவனம் தேசிய சந்தைக்கு முறையாக எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காத காரணத்தால் லிட்ரோ சிலிண்டருக்கான கேள்வி உயர்வடைந்துள்ளது. லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு  தடையின்றி  எரிவாயுவை விநியோகிப்பதாக தற்போது உறுதியளித்துள்ளது.

10 ஆயிரம் மெற்றிக்தொன் எரிவாயுவை அரச நிறுவனத்தின் ஊடாக   கொள்வனவு செய்வதற்கு இந்த நிறுவனத்துக்கு வசதிகளை தற்காலிகமாக  ஏற்படுத்திக்  கொடுத்துள்ளோம்.

லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு  சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை  நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம் எடுக்கப்படும். நுகர்வோர் அதிகார சபைக்கு அதற்கான அதிகாரம் காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52
news-image

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறை முழுமையாக...

2026-03-15 16:04:28