இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்ற வித்தக விழாவும் நூல் வெளியீட்டும்

03 Mar, 2026 | 12:12 PM
image

இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் வித்தக விழாவும் நீதி முரசு நூல் வெளியீட்டு விழாவும்  கடந்த சனிக்கிழமை 28ஆம் திகதி இலங்கை சட்டக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

2025ஆம் ஆண்டு நிர்வாக குழு தலைவர் க.உமாசுதன் மற்றும் செயலாளர் எம்.என். பாத்திமா நஸ்லா ஆகியோரின் தலைமையில் மன்றம் 75 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வித்தக விழா மற்றும் 57 ஆவது நீதி முரசு சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரத்தினம் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே. கனக ஈஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மேலதிக சட்டவரைஞரும் தமிழ் மன்றத்தின் பெரும்பொருளாளர் செல்வ குணபாலனால் நூல் மதிப்பீட்டு உரையை செய்யப்பட்டது.

தமிழ் மன்றத்தினால் நடத்தப்பட்ட பல்வேறு விவாதப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் மற்றும் சட்ட ஆய்வுக் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு 57 ஆவது நீதி முரசு சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன் போது அதிதிகள் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்ததுடன்  அதிதிகளுக்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றன.

 

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44