எம்முடைய கால் பகுதிக்கும் இதயம் மற்றும் நுரையீரலின் இயக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. காலில் ஏற்படும் ரத்த உறைவு பாதிப்பை உடனடியாக துல்லியமாக அவதானித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.இதை புறக்கணித்தால் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதயத்தில் இருந்து உடலில் அனைத்து பகுதிக்கும் ரத்தம் பம்ப் செய்யப்படுவது போல்... கால் பகுதியிலிருந்தும் அசுத்தமான குருதி இதயத்திற்கு வருகை தந்து, அதன் பிறகு நுரையீரலுக்கு சென்று அவை சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் இதயத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுழற்சியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எம்மில் சிலர் கழிவறையிலோ குளியலறையிலோ அல்லது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது என்றால்... அவர்களுடைய கால்பகுதியில் இரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக இதயத்திற்கான ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்திருக்கக் கூடும். இதனை மருத்துவ மொழியில் பல்மனரி எம்போலிசம் என குறிப்பிடுகிறார்கள். கால் பகுதியில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை துல்லியமாக அவதானித்து சிகிச்சை பெற வேண்டும். புறக்கணித்தால் கால் பகுதியில் சிறிதளவு வீக்க பாதிப்பு ஏற்பட்டோ அல்லது அறிகுறிகளை வெளிப்படுத்தாமலோ மாரடைப்பு ஏற்படக்கூடும். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் கால்பகுதியில் ரத்த உறைவு பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களே.
இதனால் கால் வீக்கம் அல்லது கால் பகுதியில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை முழுமையாகவும் விரைவாகவும் பெற வேண்டும்.
வைத்தியர் அருணகிரி தொகுப்பு அனுஷா.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM