நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மதீப்பீட்டு பணிகளுக்காக முழுமையாக பயன்படுத்தப்படும் ஐந்து பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்படுகளுக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் செப்டம்பர் 11 திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.