நீரில் மூழ்கிய 18 வயதான இரு சிறுவர்கள் மாயம்

Published By: Vishnu

02 Mar, 2026 | 03:38 AM
image

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பகுதியில் நீர்நிலை ஒன்றில் படகொன்றின் உதவியுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் சனிக்கிழமை (28) காலை மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. படகொன்றின் உதவியுடன் இரு சிறுவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் படகு கவிழ்ந்து விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தின்போது, குறித்த நீர்நிலையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். பதவிகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, குறித்த இளைஞர்களைக் கண்டறியப் பொலிஸார், கடற்படை மற்றும் முப்படையினரின் சுழியோடிப் பிரிவினரின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3...

2026-04-13 10:51:45
news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10