தம்பதிகள் வருடங்கள் பல சென்றும் கருத்தரிக்கவில்லை என்ற குறையில் பயணங்களை ஆரம்பிக்கின்றனர். இந்த பயணத்தின் பாதையில் எத்தனை தடைகளை தாங்க வேண்டி உள்ளது. ஆரம்ப காலத்தில் இதற்கான பயணம் இந்தியா வரை சென்று அங்கு பல மாதங்கள் பல தங்கியிருந்து சிகிச்சைகளை பெற்றனர். கர்ப்பம் தரிக்க தாமதமாகும் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்து கருத்தரிக்க வைப்பது ஒரு சவாலான விடயம். ஆனால் அதனைவிட கவலையான விடயம் சிகிச்சைகள் மூலம் தங்கிய கருவை தக்கவைத்து கர்ப்ப காலத்தை பராமரித்து அவர்களது கையில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்து கொடுப்பதாகும்.
இதனை தான் IVF கர்ப்பகால பராமரிப்பு எனக் கூறுகிறோம். (IVF Pregnancy) கடந்த காலங்களில் எமது மக்கள் இந்தியா சென்று செயற்கை முறை கருக்கட்டல் IVF மூலம் கருத்தரித்து பின்னர் அந்த கரு வளர்ந்து ஒரு குழந்தையாக பிரசவிக்கும் வரை உள்ள கர்ப்ப காலம் முழுவதுமே இந்தியாவில் தங்கியிருந்து பின்னர் கையில் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டே நாடு திரும்பினார்கள். இந்த 10 மாத கர்ப்ப காலம் தம்பதிகளை பொறுத்தவரை எந்த அளவு ஏக்கமும் அச்சமும் நிறைந்த காலம் என அவர்களைக் கேட்டால் தெரியும். இதனை அனுபவிப்பவர்கள் இதன் வேதனையை சொல்லி இன்னொருவருக்கு புரிய வைக்க முடியாது.
இவ்வாறு கருத்தரிக்க பல மாதங்கள் இந்தியாவில் தங்கி பின்னர் கர்ப்ப காலத்தை தொடர இந்தியாவில் தங்கி தொடர்ந்து பிரசவித்த குழந்தையை சில மாதங்கள் அங்கு பராமரித்து பின்னர் நாடு திரும்புவது என்பது பல மாதங்கள் நிறைந்த காலமா? இல்லை ஓரிரு வருடங்களே போய்விட்டது. இந்த நீண்டகாலம் இந்தியாவில் சிகிச்சைக்கென தங்கும்போது இதற்கான செலவுகள் ஒருபுறம் இருக்க இந்த நீண்டகாலம் கணவன் மனைவி அங்கு தங்கியிருக்கும் போது அவர்களது வேலை வாய்ப்புக்கள் தொழில் என்பவற்றைக் கூட இழக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் இந்த நீண்டகால லீவுகளினால் தமது வேலை வாய்ப்பை நிரந்தரமாக இழக்கும் பரிதாபம் ஏற்படுகின்றது. செலவுகள் பல நிறைந்த இக்கால கட்டத்தில் வேலை வாய்ப்பை இழப்பதையும் வருமானம் இல்லாமல் வாழ்வதையும் எங்கு போய் சொல்வது இத்தனை சோகங்களையும் தமது மனதில் தாங்கிக் கொண்டு பிறக்கப் போகும் தமது குழந்தைக்காக அவர்கள் ஆவலுடனும் அவதானத்துடனும் இருப்பது மிகவும் கடினமானதும் அதேவேளை, ஒரு பாராட்டப்படக்கூடியதுமான விடயமாகும்.
இவ்வாறு எமது மக்கள் அங்கும் இங்குமாக இன்னல்களுடன் வாழும்போது நாம் அவற்றை கேள்விப்படுவதுடன் விட்டு விட முடியுமா? இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாம் நமது மக்களது இன்னல்களுக்கு விடிவு காண்பது தான் முதல் கடமை. ஆகையால் அவர்களது செலவீனங்களை குறைக்கும் முகமாகவும் அவர்களது விடுமுறைகள் மற்றும் இந்தியாவில் தங்க வேண்டிய காலங்களை குறுகிய தாக்குவதற்காகவும் நாம் என்ன செய்யலாம் என நினைத்தால் அதற்கு விடை என்ன?
இவ்வாறு செயற்கை முறையில் அதாவது IVF முறையில் கரு தங்கியவர்கள் அடுத்ததாக பிரசவம் வரை இந்தியாவிலேயே தங்க வேண்டுமா அல்லது தமது நாடு திரும்பி கர்ப்ப காலத்தை சொந்த நாட்டிலேயே பராமரித்து பிரசவத்தையும் தமது நாட்டிலேயே பார்க்க முடியுமா என்ற தீர்மானத்தை முடிவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். இந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு பக்க பலமாக நாம் அண்மைக்காலமாக IVF முறையில் இந்தியாவில் கருக்கட்டிய தம்பதிகளை சில மாதங்களில் நாடு திரும்பியதும் அவர்களது கர்ப்ப காலத்தை கண்ணும் கருத்துமாக பராமரித்து சவால்களையும் சோதனைகளையும் தாண்டி ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்து கொடுப்பது ஒரு ஆதாரமாக உள்ளது.
இதன் மூலம் நன்மை அடைவது தம்பதிகள். அவர்களில் சிலர் மூன்று மாதக் கர்ப்ப காலத்திலும் சிலர் நான்கு ஐந்து மாத கர்ப்ப காலத்திலும் நாடு திரும்புகின்றனர். இவர்களில் சிலர் இரட்டைக் குழந்தைகளையும் தாங்கி வருகின்றனர். இந்த கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சிக்கல்கள் எவை என்று இப்போது பார்ப்போம். கர்ப்ப காலத்தில் குருதி அமுக்கம் அதிகரிக்க தொடங்கும். அதனை சரியாக கையாண்டு கர்ப்ப காலத்தை தொடர வேண்டியிருக்கும். இதனை விட மிகவும் சோதனையான விடயம் இந்த IVF கர்ப்ப காலத்தில் சீனியின் அளவு அதிகரித்து கர்ப்ப கால நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. இதன்போது சரியான உணவுப் பழக்கத்தாலும் இன்சுலின் ஊசியாலும் சீனியின் அளவை சரியாக கட்டுப்படுத்தி கர்ப்ப காலத்தை வென்றெடுக்க வேண்டியுள்ளது.
அடுத்து வரும் சிக்கல் கர்ப்பத்தில் வளரும் சிசு வளர்ச்சி குறையக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. இதனை நாம் ஒழுங்கான ஸ்கான் பரிசோதனைகள் மூலம் தகுந்த தருணத்தில் கண்டறிந்து பிரசவத்தை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேபோல் சிலருக்கு குறை மாதப் பிரசவ வலி ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதால் அதனையும் கண்டறிந்து கர்ப்ப காலத்தை தொடர வைப்பதற்கான சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. மேலும் சிலரில் குறை மாதத்தில் பன்னீர் குடம் உடைந்து போனால் அதற்கான உரிய பராமரிப்பை செய்து சிசுவை காப்பாற்றுவது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM