இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது!

Published By: Digital Desk 1

01 Mar, 2026 | 03:12 PM
image

இந்திய கடற்படைக் கப்பலான INS TARANGINI திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்துக்காக இந்த கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையானது, கடற்படை மரபுகளுக்கு இணங்க திருகோணமலை துறைமுகத்தில் கப்பலை வரவேற்றது.

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள SAIL TRAINING SHIP  வகைக்குரிய INS TARANGINI என்ற கப்பல் 54 மீற்றர் நீளம் கொண்டதுடன், 36 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது.

மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Nitin Gajjar கடமையாற்றுகின்றார்.  

குறித்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், கடற்படை பயிற்சி அதிகாரிகள் மற்றும் Sea Cadets கப்பலில் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கவும், கப்பலின் செயல்பாட்டு செயல்திறனைக் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும், நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் கப்பலின் பணியாளர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த பெண்குழந்தை :...

2026-04-21 16:27:15
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி...

2026-04-21 16:19:25
news-image

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து...

2026-04-21 15:41:48
news-image

கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி ;...

2026-04-21 15:41:27
news-image

பயாகலையில் “குடு சலிந்துவின்” நெருங்கிய சகாக்கள்...

2026-04-21 15:26:29
news-image

பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள்...

2026-04-21 15:26:07
news-image

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு...

2026-04-21 15:22:29
news-image

மாகும்புரவில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் புதிய...

2026-04-21 15:16:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11