அரை இறுதியைக் குறிவைத்து பாகிஸ்தான் 212 ஓட்டங்களைக் குவித்துள்ளது

Published By: Vishnu

28 Feb, 2026 | 09:33 PM
image

(பல்லேகலை அரங்கலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து  212 ஓட்டங்களைக் குவித்தது.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கைக்கு எதிராக அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

ஆரம்ப வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்து பாகிஸ்தானுக்கு கணிசமான ஓட்டங்களைக் குவிக்க உதவினார்.

உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பைப் பெறவேண்டும் என்ற கங்கணத்துடன் களம் இறங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை இலகுவாக குவித்தது.

ஆரம்ப வீரர்களான சாஹிப்ஸதா பர்ஹான், பக்கார் ஸமான் ஆகிய இருவரும் இலங்கையின் சகல பந்துவீச்சாளர்களையும் விளாசி அடித்து ஓட்டங்களை மிக இலகுவாக குவித்தனர்.

அவர்கள் இருவரும் 95 பந்துகளில் சாதனைமிகு 176 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் இது சகல விக்கெட்களுக்குமான அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.

இதற்கு முன்னர் சென்னையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான குழுநிலை போட்டியில் நியூஸிலாந்தின் டிம் சீஃபேர்ட், ஃபின் அலன் ஆகியோர் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 175 ஓட்டங்களே அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

பக்கார் ஸமான் 42 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்று துஷ்மன்த சமீரவின் பந்துவீச்சில் இன்சைட் எஜ் மூலம் போல்ட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து கவஜா நபே (2), ஷதாப் கான் (7) மொஹம்மத் நவாஸ் (0), சல்மான் அகா (0) ஆகியோர் 17 பந்துகளில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  ஆட்டம் இழந்தனர். (198 - 5 விக்.)

அதுவரை மறுபுறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சாஹித்ஸதா பர்ஹான் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

60 ஓட்டங்களை எதிர்கொண்ட சாஹிப்ஸதா பர்ஹான் 9 பவுண்டறிகள். 5 சிக்ஸ்களுடன் சரியாக 100 ஓட்டங்களைக் குவித்தார்.

213 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் சஞ்சு செம்சன்...

2026-04-12 00:43:44
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3ஆவது வெற்றியை...

2026-04-11 23:46:46
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடான ஒருநாள் தொடரை ...

2026-04-11 23:37:22
news-image

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி...

2026-04-11 00:50:58
news-image

ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை...

2026-04-10 17:20:37
news-image

39 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போட்டியில் கண்டியை...

2026-04-10 16:54:40
news-image

ஆசிய மல்யுத்த தேர்வுப் போட்டியில் பிரகாசித்த...

2026-04-10 16:49:45
news-image

கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட தம்புள்ளை-கொழும்பு...

2026-04-10 16:02:34
news-image

சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் 9...

2026-04-10 13:21:07
news-image

முகுல் சௌதரியின் ஆட்டம் இழக்காத அரைச்...

2026-04-10 04:54:36
news-image

காருண்ய பணிக்காக ஏலம் விட்ட ஒலிம்பிக்...

2026-04-10 04:50:20
news-image

தனி உலக மரதன் சம்பியன்ஷிப் ;...

2026-04-09 17:05:46