எம்மில் சிலர் விருந்துகளில் பங்குபற்றும் போது சுவையின் காரணமாக அளவு தெரியாமல் அகால தருணத்திலும் அதிகமாக பசியாறுவார்கள். இவர்களுக்கு நாளடைவில் வயிற்று வலி, அடிக்கடி மலம் கழித்தல் அல்லது மலச்சிக்கல், மலத்துடன் சளி வெளியேறுதல், மலத்துடன் குருதி வெளியேறுதல், உடல் எடை குறைதல் .. ஆகிய பாதிப்பு ஏற்பட்டு இருந்தால்.. உங்களுடைய பெருங்கடலில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை அவதானித்து அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர்கள் இத்தகைய தருணத்தில் பிரத்யேக பரிசோதனைகள் மூலம் உங்களின் பெருங்குடலை துல்லியமாக அவதானித்து, மருந்தியல் சிகிச்சைகள் மூலம் நிவாரணத்தை வழங்க இயலுமா? அல்லது சத்திர சிகிச்சை மூலமாகத்தான் தீர்வினை வழங்க இயலுமா? என அவதானிப்பர். இதில் சிலருக்கு ஹெமிகோலெக்டோமி எனும் சத்திர சிகிச்சை அவசியப்படும்.
இத்தகைய தருணத்தில் நோயால் பாதிக்கப்பட்ட பெருங்குடலில் பகுதி அளவு சத்திர சிகிச்சை மூலம் அகற்றி ஆரோக்கியமான பகுதியை பாதுகாப்பதற்காக ஹெமிகோலெக்டோமி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இது சிலருக்கு இடது புறத்திலும், சிலருக்கு வலது புறத்திலும் மேற்கொள்கிறார்கள். பொதுவாக வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அதிர்ச்சி அல்லது காயம், அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் வீக்கம், திசு வளர்ச்சி, ஆகியவற்றுடன் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இத்தகைய சத்திரசிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
ரத்த உறைவு பாதிப்பு மற்றும் இதயம், நுரையீரல் குறைபாடு உள்ளவர்களுக்கு இத்தகைய சத்திர சிகிச்சை பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் நிலைமையின் தீவிரத்தை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக சத்திர சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
இத்தகைய சத்திர சிகிச்சைக்கு முன் கொலனோஸ்கோபி , குருதி - சிறுநீர் பரிசோதனைகள், திசு பரிசோதனை ஆகியவற்றையும் மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இத்தகைய சத்திர சிகிச்சை தற்போது லேப்ராஸ்கோபிக் எனும் நவீன தொழில்நுட்பத்துடனும் ரொபாட்டிக் எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடனும் மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்வியல் நடைமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். ஏனெனில் சிலருக்கு இந்த சத்திர சிகிச்சை காரணமாக சிறிய அளவிலான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
இத்தகைய சத்திர சிகிச்சையின் போது நோயாளிகள் குறிப்பிட்ட காலம் வரை வைத்திய சாலையில் தங்கி இருக்க வேண்டியதிருக்கும். அதன் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை அதாவது நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு முறையை முழுமையாக பின்பற்ற வேண்டும். இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினால்.. உங்களுக்கு பெருங்குடல் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
வைத்தியர் சந்திரசேகரன்
தொகுப்பு அனுஷா.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM