வட கொரி­யா­வா­னது அதி சக்தி வாய்ந்த  ஐத­ரசன் குண்­டொன்றை நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை  பரி­சோ­தித்­துள்­ள­தாக அறி­வித்­துள்ள நிலையில் அது குறித்து உலக நாடுகள் கடும் கண்டம் தெரி­வித்­துள்­ளன.

அந்­நாட்டின்  தென் கொரிய ஜனா­தி­பதி மூன் ஜே–இன் வட  கொரி­யாவின்  இந்த அணு ஆயுதப் பரி­சோ­தனை குறித்து கடும் சினத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

 வட கொரி­யா­வுக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் சபையின் புதிய தடை விதிப்­பு­களை உள்­ள­டக்கி கடு­மை­யான தண்­ட­னையை விதிக்க வேண்டும் என  அவர் அழைப்பு விடுத்­துள்ளார்.

அந்­நாட்­டுக்கு எதி­ராக ஐக்கிய நாடுகள் பாது­காப்பு சபை அனைத்து இரா­ஜ­தந்­திர  நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்­ப­துடன் அந்த நாட்டை முழு­மை­யாக தனி­மைப்­ப­டுத்த வேண்டும் என தென் கொரிய ஜனா­தி­பதி  வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக  அந்­நாட்டு தேசிய பாது­காப்பு சபையில்  இடம்­பெற்ற அவ­ச­ர­காலக் கூட்­ட­மொன்­றை­ய­டுத்து ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு ஆலோ­சகர் சுங் இயுயி- யொங் தெரி­வித்தார்.

 அமெ­ரிக்­காவின் பல­மான  தந்­தி­ரோ­பாய சொத்­துக்­களை (செயற்­றிறன் வாய்ந்த அணு ஆயு­தங்களை) தென் கொரி­யாவில் நிலை நிறுத்­து­வது குறித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­ததாக சுங் இயுயி- யொங் மேலும் கூறினார்.

அதே­ச­மயம் வட கொரி­யாவின் பிர­தான நட்பு நாடான  சீனாவும் இந்த அணு ஆயுதப் பரி­சோ­த­னைக்கு கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

 வட கொரியா  தனது அணு சக்திப் பரி­சோ­த­னைகள்  தொடர்­பான சர்­வ­தேச ரீதி­யான  எச்­ச­ரிக்­கை­களை அலட்­சியம் செய்­துள்­ள­தாக அந்­நாடு  தெரி­வித்­துள்­ளது. இந்த அணு­சக்திப் பரி­சோ­த­னைக்கு சீன அர­சாங்கம் தனது கடும் எதிர்ப்­பையும்  பல­மான கண்­ட­னத்­தையும் தெரி­விப்­ப­தாக  அந்­நாட்டு வெளி­நாட்டு அமைச்சால் அதன் இணை­யத்­தளப் பக்­கத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 வட கொரி­யா­வுக்கு எதி­ராக வர்த்­தக மற்றும் எண்ணெய்  உற்­பத்­திகள் தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை உள்­ள­டக்கி மேல­திக தடை­களை விதிக்க ஜப்­பா­னிய தலைமை அமைச்­ச­ரவை செய­லாளர் யொஷிஹைட் சுகா அழைப்­பு ­வி­டுத்­துள்ளார்.

 மேற்­படி அணு­சக்தி பரி­சோ­தனை மூலம் வட கொரியா  ஐக்­கிய நாடுகள் சபை­யி­னது தீர்­மா­னங்கள் சம்­பந்­த­மான கோரிக்­கை­க­ளையும் சர்­வ­தேச சட்ட விதி­மு­றை­க­ளையும் மீறி­யுள்­ள­தா­கவும் அந்தப் பரி­சோ­த­னைக்கு தாம் பல­மான கண்­ட­னத்தைத் தெரி­விப்­ப­தா­கவும் ரஷ்ய வெளி­நாட்டு அமைச்சால்  வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 வட கொரி­யாவின் தலை­மைத்­து­வ­மா­னது  பிராந்­தி­யத்தில் தீவி­ர­மான அச்­சு­றுத்­த­லொன்றைத் தோற்­று­வித்­துள்­ளது எனவும் இந்த விவ­காரம் தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட மற்றும் அக்­க­றை­யுள்ள அனைத்துத் தரப்­பி­னரும் உட­ன­டி­யாக  பேச்­சு­வார்த்­தை­களை  முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்­கையில் மேலும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

 வெற்­றி­க­ர­மாக  அணு­ஆயு­த­மொன்றை பரி­சோ­தித்­துள்­ள­தாக வட கொரி­யாவால் மேற்­கொள்­ளப்­பட்­ட அறி­விப்புக் குறித்து சர்­வ­தேச சமூகம் மிகவும் உறு­தி­யான பதி­ல­டி­யொன்றை வழங்க வேண்டும் என பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்­துள்ளார்.

 அதே­ச­மயம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பும் ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்ஸோ அபேயும் வட கொரி­யா­வுக்கு எதி­ரான அழுத்­தத்தை அதி­க­ரிப்­பது குறித்து தொலை­பே­சியில் சுமார் 20  நிமி­டங்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இந்த விவ­காரம் தொடர்பில் ஷின்ஸோ அபே அமை­தி­யாக ஆராய்ந்து வரு­வ­தா­கவும் வட கொரி­யா­வுக்கு எதி­ராக எடுக்கக் கூடிய அவ­சியமான  நட­வ­டிக்கை குறித்து ஏனைய நாடு­களின் தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் ஐக்­கிய நாடுகள் அணு­சக்தி கண்­கா­ணிப்­ப­கத்தின் தலைவர் யுகியா அமனோ வட கொரி­யாவின்  பிந்­திய அணு­சக்­திப் பரி­சோ­தனை மிகவும் வருந்­தத்­தக்­கதாகவும் சர்­வ­தேச சமூ­கத்­தினால் திரும்பத் திரும்ப விடுக்­கப்­பட்ட கோரிக்­கை­களை மீறு­வ­தா­கவும் உள்­ளது எனத் தெரி­வித்­துள்ளார்.