அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக இன்று பிற்­பகல் 3.30க்கு கிரி­பத்­கொட சந்­தியில் மாபெரும் போராட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. கூட்டு எதி­ர­ணி­யினர் இந்த ஆர்ப்­பாட்­டத்தை நடத்­த­வுள்­ளனர். 

பிரே­சி­லுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜெனரல் ஜகத் ஜயசூரி­ய­வுக்கு எதி­ராக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ள கருத்­துக்­க­ளுக்கு கண்­டனம் வெளி­யிடும் வகை­யி­லேயே இப்­போ­ராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

பிரே­சி­லுக்­கான முன்னாள் இலங்கைத் தூது­வ­ராக பணி­யாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரி­ய­வுக்கு எதி­ராக பிரேசில் உட்­பட இரண்டு நாடு­களில் இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும்  யுத்தக் குற்­றங்கள் தொடர்­பாக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

இவ்­வா­றான நிலையில் ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக முறை­யான விசா­ர­ணை­யொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அச்­ச­ம­யத்தில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு தான் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் அமைச்சர் சரத் பொன்­சேகா தெரி­வித்­த­தோடு கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து அமைச்சர் சரத் பொன்சேகா, ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய உள்­ளிட்ட இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுக்க முனை­கின்றார் என கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர்.

அவ்­வா­றான நிலை­யி­லேயே அமைச்சர் பொன்­சேகா அமைப்­பா­ள­ராக உள்ள களனி தொகு­தியில் கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தலைமையில் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.