பாணந்துறை சாகர வீதியை சேர்ந்த பிரபல பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான பாத்தா என அறியப்படும் இந்திக உதயகுமார (37 வயது ) கூரிய ஆயுதங்களால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை கடற்கரையில் சிறுவர் பூங்கா ஒன்றுக்கு அருகில் நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபரும் அவரது சகாக்களும் வெவ்வேறு கும்பல்களுடன் ஏற்படுத்தி கொண்ட மோதலின் பிரதிபலனாகவே பாத்தா கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த கும்பலை பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில் மூவர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளதை உறுதி செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.