தனது வீட்டில் எரி­வாயு  சிலிண்­டரின் குழாய் வெடித்­ததில் கைகள், வயிறு மற்றும் கால் பகு­தியில் தீக்காயங்­க­ளுக்கு உள்­ளான பிர­பல சினிமா நடி­கையும்  காலி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கீதா குமா­ர­சிங்க தொடர்ந்தும் கொழும்பு தனியார் மருத்­து­வ­ம­னை­யொன்றில் சிகிச்சை பெற்று வரு­கின்றார். 

அவ­ரது நிலைமை கவலைக் கிட­மாக இல்லை என்று சுட்­டிக்­காட்­டிய குறித்த தனியார் வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர்,

கீதாவின் தீக்காயங்கள் ஊடாக கிருமி தொற்­றுக்கள் மற்றும் வேறு உபா­தைகள் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை தவிர்க்க அவ­ருக்கு அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­வ­தாக கூறினார்.

வெலிக்­கடை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட தனது வீட்டில், சமைய­ல­றையில் வைத்து எரி­வாயு  சிலிண்­டரில் இருந்து அடுப்­புக்கு போகும் குழாய் ஒன்று நேற்று முன்தினம் சனிக்­கி­ழமை வெடித்­ததில் கீதா குமா­ர­சிங்க தீக்காயங்­க­ளுக்கு உள்­ளானார்.

இத­னை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக கொழும்பிலுள்ள பிர­பல தனியார் மருத்­துவ மனை­யொன்றில் அனு­ம­திக்­கப்­பட்டார். இந் நிலையில் அவ­ருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கீதாவின் வயிற்றுப் பகு­தியில் பெரும்­பா­லான தீக்காயங்கள் உள்ள நிலையில் கால் பகு­தி­யிலும் கைக­ளிலும் தீக்காயங்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கீதா சிகிச்சை பெறும் தனியார் வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

சம்­பவம் தொடர்பில் வைத்­தி­ய­சாலை ஊடாக பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்து, வெலிக்­கடை பொலிஸார் விசேட விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, பாரா­ளு­மன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மாலையிலேயே கீதா குமாரசிங்கவை பார்வையிட வைத்தியசாலை சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.