எனது தலை­மைப்­பொ­றுப்பின் கீழான காலப்­ப­கு­தியே ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சிக்­கான பொற்­கா­ல­மாகும். அதனை தற்­போ­துள்­ள­வர்கள் மறந்து விட்­டார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குற்றம் சாட்­டினார். 

 3 ஆம் திகதி நடை­பெறும் மாநாட்டில் கலந்­து­கொள்ள  31ஆம் திகதி இரவு அறி­வித்­த­வுடன் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு நான் வேலைப்­ப­ளு­வற்­றவன் கிடை­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார். 

காலி ரத்­கமை மஹா­மண்­ட­ல­ரா­மய விகா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன் றில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி செப்­டெம்பர் இரண்டாம் திக­தியே உரு­வாக்­கப்­பட்­டது. பின்னர் அவர் வழி­வந்த தலை­வர்­களால் கட்சி மென்­மேலும் மேம்­ப­டுத்­தப்­பட்­டது.  

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் 66 ஆவது பூர்த்­திக்­கொண்­டாட்ட நிகழ்­வுகள்   3 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ள­தாக கடந்த 31 ஆம் திகதி இரவே எனக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். எமது ஆட்­சிக்­கா­லத்தில் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு முன்­கூட்­டி­ய­தா­கவே அறி­வித்­து­வி­டுவோம்.  ஆனால் குறு­கிய காலத்தில் இவ்­வாறு அறி­வித்தல் விடுத்­த­வுடன் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு நான்  வேலைப்­ப­ளு­வற்­றவன் கிடை­யாது. இதுவே நான் குறித்த சம்­மே­ள­னத்தை தவிர்ப்­ப­தற்கும் கார­ண­மாக அமைந்­தது. இவ்­வாறே தற்­போ­தைய கட்­சியின் செயற்­பா­டுகள் இருக்­கின்­றன.

இது­வ­ரை ­கா­லமும் கட்­சியின் செயற்­பா­டு­களை பொறுத்­த­வ­ரையில் என்­னு­டைய தலை­மையின் கீழான ஆட்சிக் காலத்­தி­லேயே ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி மறு­ம­லர்ச்சி பெற்­றது என்­பதை பெரு­மை­யுடன் கூறிக்­கொள்­கின்றேன்.

நான் இவ்­வாறு குறிப்­பி­டு­வ­தற்­கான கார­ண­முள்­ளது. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க என்­னிடம் தலை­மைப்­பொ­றுப்பை கைய­ளிக்கும் போது ஸ்ரீ­லங்கா சுதந்­திர கட்­சியில் 56 உறுப்­பி­னர்­களே அங்கம் வகித்­தனர். அதன்­பின்னர் நான் தலைமைப் பொறுப்­பேற்று முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்­க­ளுக்­க­மைய 56 பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்த தொகை­யா­னது 128 பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளாக  உயர்ந்­தது.  

அது­மட்­டு­மல்­லாமல் சகல மாகாண சபை­களும், நூற்­றுக்கு 90 சத­வீத பிர­தேச சபை­களும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்­சியின் கட்­டுப்­பாட்­டி­லேயே இயங்­கின. ஆகவே என்­னு­டைய தலை­மையில் கீழான ஆட்­சிக்­கா­லமே ஸ்ரீ­லங்கா சுதந்திரக்கட்சிக்கான பொற்காலமாகும். அதுவே சிறந்த கட்சிக் கான பலம்மிக்க நாட்களாகும். 

அதனை தற்போது மறந்து விட்டனர். தற்போது கட்சியின் பலம் நலிவற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்படும் வரை இந்நிலை தொடரும் என்றார்.