இந்­தி­யாவின் உத­வி­யுடன்  இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத்­திட்­டங்கள்  தாம­திக்­கப்­ப­டு­வ­தாக  இந்­தியா விசனம் வெளி­யிட்­டி­ருப்­ப­தாக  இந்திய ஊடகம் ஒன்று  தெரி­வித்­தி­ருக்­கின்­றது.  

கடந்த வாரம்  இலங்­கைக்கு விஜயம்  மேற்­கொண்­டி­ருந்த இந்­திய  வெளி­வி­வ­கார அமைச்சர்  சுஷ்மா சுவராஜ்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது  இரு­த­ரப்பு உற­வுகள் குறித்து கலந்­து­ரை­யா­டிய நிலை­யி­லேயே  இவ்­வாறு இந்­திய  உத­வி­யு­ட­னான  திட்­டங்கள்  தாம­திக்­கப்­ப­டு­வது தொடர்பில்  உரை­யா­டி­ய­தாக  தெரி­ய­வ­ரு­கி­றது.

 

இலங்கை அர­சாங்கம்  உள்­ளக  அர­சியல் சவால்­களை  சமா­ளித்து வரும் விதம் தொடர்பில் டில்லி பாராட்­டு­வ­தாக தெரி­வித்­தி­ருந்த   இந்­திய  வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  இந்­திய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக அர­சாங்கம் விரைந்து  தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்டும் என்றும்  வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இலங்­கையில் இந்­தி­யாவின் உத­வி­யுடன் முன்­னெ­டுக்­கப்­படும்  அபி­வி­ருத்தித் திட்­டங்கள் தாமதம் அடை­வது தொடர்­பாக டில்லி அண்­மைக்­கா­ல­மாக   கவ­லை­ய­டைந்­துள்ள நிலை­யி­லேயே தற்­போது  இந்­திய   வெளி­யு­றவு அமைச்சர் இந்த விட­யத்தை  சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.  இந்து சமுத்திர  மாநாட்டில் கலந்துகொள்வதற்காக   இந்திய  வெளியுறவு அமைச்சர்  தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.