மகளிர் தினத்தில் வீர வனிதையர் விருது விழா!

28 Feb, 2026 | 10:44 AM
image

46ஆவது ஆண்டில்  கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த  ஆண்டு உருவாக்கியது. இந்த  அணியினர்   கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை   முன்னிட்டு  வீர வனிதையர்  விருது நிகழ்வை அறிமுகம் செய்தனர். 

இதன் இரண்டாம் கட்ட  விழா இம்முறை மலரும் மகளிர் தினத்தை முன்னிட்டு  எதிர்வரும் 7.03.2026 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு-11 செட்டியார் தெருவில்  அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இவ் விழாவில்  பிரதம அதிதியாக மகளிர் மற்றும்  சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்   கலந்து கொள்கின்றார்.

நிகழ்விற்கு  முன்னிலை வகிக்கின்றார் பிரபல  தொழில் அதிபர் பி.எஸ்.செல்வரட்ணம் சிறப்பு  அதிதியாக  தமிழகம் புதுக்கோட்டை தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தியும் கெளரவ அதிதிகளாக மேலும் பலரும் பங்கேற்கின்றனர். 

கடந்த  ஆண்டு நடை பெற்ற மகளிர் தின விழாவில்  வழங்கப்பட்டது போல் இவ்வாண்டும்  பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணங்களும், துப்புரவுத் தொழிலாளருக்கு சாறி மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படவுள்ளன.

நிகழ்வின் பிரதான அம்சமாக கலை,இலக்கியம், ஊடகம்,சமூக மற்றும் ஆன்மீகப்  பணிகளில் ஈடுபட்டுவரும் பெண்கள் 20 பேருக்கு வீர வனிதை விருதும் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

பல்வேறு  கலைக் கதம்ப நிகழ்ச்சிகளும். ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன  என மகளிர் அணி  நிர்வாகம் அறிவிக்கிறது.

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியினர் நடத்தும் சர்வதேச மகளிர் தின விழாவின் சிறப்பு  அம்சமான வீரவனிதையர் விருது விழாவில்  இம்முறை  கெளரவம்  பெறுவோர் விபரம்.....

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

2026-08-16 17:02:09
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண...

2026-08-16 16:40:38
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்: சம்பிரதாயப்...

2026-08-16 16:31:53
news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41