(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் மிகவும் தீர்மானம் மிக்க ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2 போட்டியில் இலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக நியூஸிலாந்து நிர்ணயித்துள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்துவீசி நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்களை சோதனைகளுக்குள்ளாக்கினர்.
16ஆவது ஓவர்வரை நியூஸிலாந்தை 98 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை பந்துவீச்சாளர்கள் அதன் பின்னர் வெளுத்துக்கட்டபட்டனர்.
அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், கோல் மெக்கன்ச்சி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 51 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டனர்.
கடைசி 4 ஓவர்களில் நியூஸிலாந்து 70 ஓட்டங்களைக் குவித்தது.
மிச்செல் சென்ட்னர் 26 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களையும் கோல் மெக்கொன்ச்சி 23 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட ரச்சின் ரவிந்த்ரா 32 ஓட்டங்களையும் பின் அலன் 23 ஓட்டங்களையும் க்லென் பிலிப்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM