முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நெடுங்கேணி வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.  

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.