ஹப்புத்தளை தமிழ்ப் பாடசாலைகளில் ஐந்தாம் தர மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

26 Feb, 2026 | 11:30 AM
image

அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும் 'நவ்வாவ்' அமைப்பின் அனுசரணையுடன், பதுளை மாவட்டம் ஹப்புத்தளை பிரதேசத்தில் உள்ள இரண்டு தமிழ்ப் பாடசாலைகளில் இந்தாண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று கடந்த 23ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பதுளை, இதல்கஸ்ஹின்ன தமிழ் வித்தியாலயம் மற்றும் போவே தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 30 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நன்மைப்பெறவுள்ளனர். 

இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலை நேர வகுப்புக்கு மேலதிகமாக மாலை நேர விசேட வகுப்புகளும், வார இறுதி விசேட கருத்தரங்களும் நவ்வாவ் அமைப்பின் அனுசரணையுடன் நடத்தப்படவுள்ளதுடன், அந்த வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான காகிதாதிகள், மாதிரி வினாத்தாள்கள், அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்டவை நவ்வாவ் அமைப்பினால் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அத்துடன் கருத்தரங்களுக்கான முழுமையான செலவினங்களும் நவ்வாவ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் மேலதிக வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கான சத்துணவு திட்டம் ஒன்றும் இலவசமாக நடைமுறைப்படுப்படுகிறது.

இந்த வேலைத்திட்டம் கடந்த 23ம் திகதி அந்தநந்த பாடசாலைகளில் நவ்வாவ் அமைப்பின் சார்பில் சுயாதீன ஊடகவியலாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனினால், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசியர்களின் பங்குபற்றலுடனும், பெற்றோரின் பிரசன்னத்துடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மாணவர்களின் வளர்ச்சி கருதி, தூரநோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம், தங்களுடைய பிள்ளைகளுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29