சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்தல்: புதிய நூல் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராட்டு!

25 Feb, 2026 | 11:37 AM
image

உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்தல் எனும் நூல், கொள்கை வகுப்பு, இராஜதந்திரம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகின்ற ஒரு காலோசிதமான, காத்திரமான பங்களிப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் (BCIS) புதிய வெளியீடான இந்நுால் வெளியீட்டு விழா, 24ஆம் திகதி BCIS கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியரும், BCIS நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் கல்வி விவகாரச் சபையின் உறுப்பினருமான ஓய்வுபெற்ற சிறப்புநிலை பேராசிரியர் காமினி கீரவெல்லவினால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்யும் வகையில் இந்நூல் மிகக் காத்திரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நூல் வெளியீட்டிற்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகள் எவ்வாறு மீள்கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதன் பல்வேறு பாதைகளைக் கண்டறிவதற்கும் இந்த வெளியீடு ஒரு காலோசிதமான, முக்கியமான பங்களிப்பாக அமைகிறது எனக் குறிப்பிட்டார்.

சர்வதேச உறவுகளை ஒரு உண்மையான பன்முகத்தன்மை கொண்ட துறையாக மீள்வரைவு செய்ய இந்நூல் அழைப்பு விடுப்பதாகவும், இது சர்வதேச உறவுகள் என்ற துறைக்கு மாத்திரமன்றி அனைத்துப் பாடத்துறைகளுக்கும் பொருந்தும் ஒரு விடயம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் (BCIS) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த அறக்கட்டளை முகாமைத்துவ சபையின் பிரதிநிதிகள், BCIS நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்விமான்கள், அதிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!

2026-04-19 08:38:31
news-image

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள...

2026-04-19 07:57:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு...

2026-04-19 07:56:07
news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40