திருகோணமலை – சம்பூர் 7 கிராமத்திலுள்ள கிணற்றில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில் மாணவனொருனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 6 வயதுடைய மாணவனுடையது என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில்  சம்பூர்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.