ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த 3 புதிய தூதுவர்கள்

24 Feb, 2026 | 05:54 PM
image

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நாடுகளின் தூதுவர்கள், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.

இந்நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்படி,கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra, கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al–Sanad Al–Dosari, ஸ்லோவேனியா குடியரசின் புதிய தூதுவராக Tomaž Mencin ஆகியோர் தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புதிய தூதுவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும், பரஸ்பர ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29