யாழ் - கண்டி வீதியான ஏ9 வீதியில் திறப்பனை பிரதேசத்தில் அலிஸ்தான் வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பௌத்த பிக்குணி ஒருவர் பலியானதுடன் பிக்கு உட்பட 7 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த குறித்த வேன் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனில் பயணித்த வலப்பனை கீர்த்தி பண்டாராராமயவில்லைச் சேர்ந்த 65 வயதனா பிக்குணியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்திற்கு யாத்திரைக்கு சென்றவேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த வாகனத்தில் 11 பேர் பயணித்ததாகவும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.