“நைட் டு ஷைன் இலங்கை 2026” ; மட்டக்களப்பில் மாற்றுத் திறன்கள் கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கௌரவிக்கும் சிறப்பு விழா

24 Feb, 2026 | 01:09 PM
image

உள்ளடக்கம் மற்றும் மனித கண்ணியத்தை கொண்டாடும் சிறப்பான நிகழ்வாக “நைட் டு ஷைன் இலங்கை 2026” விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. Alliance Development Trust (ADT) மற்றும் Engage Disability Network Sri Lanka (EDNSL) ஆகியவை, Tim Tebow Foundation உடன் கூட்டிணைந்து, மட்டக்களப்பு William Ault Hall மண்டபத்தில் இந்நிகழ்வை நடத்தியன.

காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்ற இவ்விழாவில், 75 மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், அவர்களது பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து “ப்ரோம்” (Prom)-முறையிலான சிறப்பு அனுபவத்தை பெற்றனர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் மதிப்பும் மரியாதையும் பெறும் வகையில் மகிழ்ச்சியும்  அன்பும் நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக பிலிமத்தலாவை தெய்வவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ரெவ. திரு. அருள்நாதன் மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு பிரதிநிதியாக டாக்டர் கோவர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“நைட் டு ஷைன்” என்பது உலகளாவிய அளவில் Tim Tebow Foundation முன்னெடுத்து வரும் ஒரு முயற்சியின் பகுதியாகும். மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் மதிப்பும் சம வாய்ப்புகளும் பெற வேண்டும் என்பதையும், சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை சவாலுக்கு உட்படுத்துவதையும், விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இவ்விழா கொழும்பில் உள்ள Temple Trees இல் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்வருடம் முதன்முறையாக மட்டக்களப்பில் நடத்தப்பட்டதன் மூலம் கிழக்கு மாகாணத்திற்கும் இந்நிகழ்வின் தாக்கம் விரிவடைந்து, தேசிய மட்டத்தில் அதன் முக்கியத்துவம் வலுப்பெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு, இசை, நடனம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் குழந்தைகள் ஒவ்வொருவரும் சிறப்பானவர்களாக உணரும்படி மறக்கமுடியாத நாளை அமைத்தனர். விழாவின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு பங்கேற்பாளரும் “ராஜா” அல்லது “ராணி” என முடிசூட்டப்பட்டு, அவர்களின் உள்ளார்ந்த மதிப்பு, கண்ணியம் மற்றும் தனித்துவம் வலியுறுத்தப்பட்டது.

“இந்த நிகழ்வு ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல,” என ADT மற்றும் EDNSL சார்பில் பிரதான ஒருங்கிணைப்பாளர் டீனா நாணயக்காரா தெரிவித்தார். “மாற்றுத் திறனாளிகள் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் காணப்படவும், மதிக்கப்படவும், உள்ளடக்கபடவும் நாம் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்” என்றார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளின் குரல்களை வலுப்படுத்துவதிலும் சமூக விழிப்புணர்வை உயர்த்துவதிலும் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர். நிலையான சமூக மாற்றத்தை உருவாக்க பொதுமக்கள் பங்கேற்பு அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

“நைட் டு ஷைன் இலங்கை 2026” ஒவ்வொரு குழந்தையும் அங்கீகாரம், மரியாதை மற்றும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை பெற தகுதியுடையவர்களே என்பதைக் குறிப்பிடும் வலுவான நினைவூட்டலாக திகழ்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39