நாட்டில் அனர்த்தங்களின் போது பாலின அடிப்படையிலான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு செய்திகளை வெளியிடுவது தொடர்பான விசேட செயலமர்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பேரனர்த்தத்தின் போது பாலின உணர்திறன் மிக்க செய்தி அறிக்கையிடல்’ எனும் தலைப்பிலான இந்த செயலமர்வு கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெற்றது.
இந்த செயலமர்வில் பத்திரிகை, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைச் சேர்ந்த 25 தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பயிற்சி பட்டறைக்கு ‘துர்யோக் நிவாரண்’ அமைப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
அண்மையில் இலங்கையைப் பாதித்த 'தித்வா ' சூறாவளிக்குப் பின்னரான சூழலில், அனர்த்த அறிக்கையிடலில் பாலின சமத்துவத்தைப் பேணுதல், தார்மீக விழுமியங்களைப் பின்பற்றுதல் மற்றும் உள்ளடக்கிய சமூகப் பொறுப்புள்ள ஊடகவியலை ஊக்குவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
இந்த பயிற்சிப்பட்டறையில் அனர்த்த இடர் குறைப்பு மற்றும் பாலின உணர்திறன் மிக்க ஊடகவியல் குறித்துப் பல நிபுணர்கள் உரையாற்றினர்.
இந்த செயலமர்வில் அனர்த்த இடர் முகாமைத்துவத்தில் ஊடகங்களின் வகிபாகம் தொடர்பில் துர்யோக் நிவாரண அமைப்பின் மாதவி ஆரியபந்து விளக்கினார்.
அனர்த்தங்களின் போது பெண்களின் நேரடி அனுபவங்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குமுதினி சாமுவேல் உரையாற்றினார்.
ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் குரல்களை ஊடகங்களில் எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து சிரேஷ்ட புலனாய்வு ஊடகவியலாளர் தில்ருக்ஷி ஹந்துனெத்தி விளக்கினார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் போது பெண்களின் தேவைகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதை விளக்கும் ‘அனர்த்தங்களை எதிர்கொள்ளல், தீர்மானங்களை எடுத்தல்: பாலின பரிமாணங்கள்’ எனும் ஆவணப்படம் இதன்போது திரையிடப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னரும் இன்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் அதே போன்ற இடைவெளிகள் காணப்படுவதாகப் பங்கேற்பாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
பெண்கள், சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிபர்கள் அனர்த்தங்களின் போது எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான பாதிப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அறிக்கையிடுவதற்கான நடைமுறைப் பயிற்சிகளும் இதன்போது வழங்கப்பட்டன.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM