பகவத் கீதையின் காலத்தால் அழியாத தத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சுவாமி பார்த்தசாரதியின் மகளும் சிஷ்யையுமான சுனந்தாஜி, வருடாந்த பகவத்கீதை சொற்பொழிவை கொழும்பில் நடத்த உள்ளார்.
பகவத் கீதையின் தத்துவம் ஜாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கும் ஒன்றாகும். விஞ்ஞானத்தை ஒழுங்கு முறையில் கற்பது போன்று, வாழ்க்கைத் தத்துவத்தையும் ஒழுங்கு முறையில் கற்க வேண்டிய அவசியத்தை இச்சொற்பொழிவு வலியுறுத்துகிறது. இதன் மூலம் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவதோடு, வாழ்வின் உயர்ந்த இலட்சியமான மெஞ்ஞானத்தை அடைய வழிகாட்டும் நோக்கமும் கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எட்டாவது அத்தியாயம் குறித்து விரிவுரை
இம்முறை நடைபெறும் சொற்பொழிவு தொடரில், பகவத் கீதையின் எட்டாவது அத்தியாயம் குறித்து சுனந்தாஜி விரிவாக விளக்கவுள்ளார்.
இந்த சொற்பொழிவு தொடர், மார்ச் 7 (சனி) முதல் மார்ச் 10 (செவ்வாய்) வரை, தினமும் மாலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை, Buddhist Cultural Centre, தும்முள்ள சந்தி, கொழும்பு 05 இல் நடைபெறும்.
இதற்கு முன்னதாக தினமும் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை பஜனை நிகழ்ச்சி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக கணபதி செட்டி செல்வநாதன் நம்பிக்கை நிதியம் இணைந்துள்ளது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் இலவசமாக நடைபெறும் என்றும், சொற்பொழிவுகள் ஆங்கில மொழியில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்காக, இணையத்தளம்: www.vedantacolombo.org](http://www.vedantacolombo.org), தொலைபேசி: 071 063 8837 என்ற வழிகளின் மூலம் தொடர்புகொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM