சோண்டர்ஸ் கழகத்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த ஞானரூபன் தலைமையிலான சொலிட் கழகம்; பெலிக்கன்ஸ் கழகம் முன்னிலை

23 Feb, 2026 | 02:09 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் சுப்பர் 8 சுற்றில் பிரபல சோண்டர்ஸ் கழகத்தை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் செபமாலைநாயகம் ஞானரூபனின் தலைமையிலான சொலிட் கழகம் வெற்றிகொண்டு வரலாறு படைத்தது.

சுப்பர் 8 சுற்றில் கடந்த வாரம் வரை தோல்வி அடையாமல் இருந்த சோண்டர்ஸ் கழகம் முதல் தடவையாக நேற்றைய தினம் தோல்வி அடைந்தது.

கொழும்பு குதிரைப்பந்தயத்திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த இரண்டு கழகங்களுக்கு இடையிலான போட்டியின் கடைசிக் கட்டத்தில் முன்னாள் தேசிய வீரரும் சிரேஷ்ட வீரருமான ஞானரூபன் போட்ட கோல் சொலிட் கழகத்தை வெற்றி அடையச் செய்தது.

இப் போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்திய சோண்டர்ஸ் கழகம் 12ஆவது நிமிடத்தில் ஸியார்ட் முபாஸல் போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது.

தொடர்ந்து 31ஆவது நிமிடத்தில் ரொஜர் பிலிப்பே போட்ட கோல் சோண்டர்ஸ் கழகத்தை 2 - 0 என முன்னிலையில் இட்டது.

எவ்வாறாயினும் இடைவேளையின் பின்னர் மிகச் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய சொலிட் கழகம் 3 கோல்களைப் போட்டு வெற்றியீட்டியது.

போட்டியின் 54ஆவது நிமிடத்தில் ஞானரூபன் இலகுவான கோல் ஒன்றைப் போட்டு சொலிட் கழகத்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

தொடர்ந்து 77ஆவது நிமிடத்தில் ஹென்றி சிபுஸே தனது தலையால் பந்தை முட்டி கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

போட்டி முடிவடைய 3 நிமிடங்கள் இருந்தபோது ஞானரூபன் பந்தை நகர்த்திச் சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சொலிட் கழகத்தை வெற்றி அடையச் செய்தார்.

விறுவிறுப்பான போட்டியில் பெலிக்கன்ஸ் வெற்றி  

இதே மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 கால்பந்தாட்டப் போட்டியில் யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்தை 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம் வெற்றிகொண்டது.

இப் போட்டியின் 9ஆவது மற்றும் 39ஆவது நிமிடங்களில் ஏர்னஸ்ட் அத்தோ இரண்டு கொல்களைப் போட்டு பெலிக்கன்ஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் மிகத் திறமையாக விளையாடி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இடைவேளைக்கு பின்னர் பெலிக்கன்ஸ் கழகம் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள தடுத்தாடும் வியூகங்களுடன் விளையாடியது.

இதன் காரணமாக சென் மேரிஸ் கழகத்தினால் கோல் போட முடியாமல் பொனது.

இந்த போட்டி முடிவை அடுத்து பெலிக்கன்ஸ் கழகம் 4 போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கிறது.

ஜாவா லேன் கழகமும் தோல்வி அடையாத அணியாக 2 வெற்றிகள், 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள் என்ற பெறுபேறுகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

 அணிகள் நிலை

சுப்பர் 8 சுற்றில் நான்காம் கட்ட போட்டிகள் முடிவில் அணிகள் நிலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் சிக்ஸில் விளையாட  புளூ ஸ்டார் ...

2026-09-14 22:08:25
news-image

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ்...

2026-09-14 14:18:46
news-image

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா...

2026-09-14 11:13:41
news-image

91.09 மீற்றர்! இலங்கையின் ரூமேஷ் பத்திரகே...

2026-09-14 09:51:50
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண சம்பியன்...

2026-09-14 05:36:19
news-image

றினோனை வீழ்த்தி முதல் சுற்றில் தோல்வி...

2026-09-13 21:10:41
news-image

சுப்பர் லீக்கில் முதல் சுற்றை வெற்றியுடன்...

2026-09-13 13:46:46
news-image

ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை?...

2026-09-13 13:20:59
news-image

பாகிஸ்தானுடனான 3ஆவது டெஸ்டில் 8 விக்கெட்களால்...

2026-09-13 01:42:52
news-image

கலம்போ எவ்சியிடம் இரண்டு கோல்கள் பின்னிலையில்...

2026-09-12 20:21:54
news-image

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட...

2026-09-12 03:07:12
news-image

ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டில்  பங்குபற்றவுள்ள...

2026-09-12 01:48:15