இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் கண்காட்சியும் வர்த்தக விழாவும் - 2026

Published By: Digital Desk 1

24 Feb, 2026 | 10:27 AM
image

எஸ்.ரிலீவரன்

இலங்கை அச்சகத்தார் சங்கம் (SLAP) ஏற்பாடு செய்துள்ள 'ஸ்ரீலங்கா பிரிண்ட் 2026' (Sri Lanka Print 2026) கண்காட்சி மற்றும் வர்த்தக விழாவின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு, கடந்த 20 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் உள்ள விக்டோரியா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர்கள், கண்காட்சியாளர்கள், ஊடக அனுசரணையாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அச்சு மற்றும் பொதியிடல் (Printing & Packaging) துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திய இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் ஜனக ரத்னகுமார, இம்முறை கண்காட்சியானது முன்னெப்போதையும் விட மிகவும் விரிவானதாகவும், சர்வதேச ஒத்துழைப்புடன் கூடியதாகவும் அமையும் என வலியுறுத்தினார். பல நாடுகளிலிருந்து சர்வதேச பங்காளர்களை ஈர்ப்பதன் மூலம், புத்தாக்கம் மற்றும் வணிக மேம்பாட்டிற்கான ஒரு உலகளாவிய தளத்தை இது உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நாளைய விடியலுக்கான நிலைபேறு மற்றும் புத்தாக்கம்" (Sustainability and Innovation for Tomorrow) எனும் இவ்வாண்டுக்கான கருப்பொருள் குறித்து பேசிய அவர், நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி நகரும் அதேவேளை, சூழல் ரீதியான பொறுப்புணர்வுடன் செயல்பட இலங்கை அச்சகத்தார் சங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பிரிண்ட் 2026 நிகழ்ச்சித் திட்டத் தலைவர் நிஷாந்த பெரேரா, இக்கண்காட்சி 2026 ஏப்ரல் 24 முதல் 26 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என அறிவித்தார்.  மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி, உற்பத்தியாளர்கள் தமது புதிய தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தவும், கொள்வனவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.

மேலும், இவ்விழாவின் முக்கிய அங்கமான விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 25 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு 'சினமன் லைஃப்' (Cinnamon Life) ஹோட்டலில் நடைபெறும் என்றும், அதற்கான விண்ணப்பங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில், இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் ஜனக்க ரத்னகுமார, முன்னாள் தலைவர் அனில் காரியவசம், முதலாவது உப தலைவர் நிஸாந்த பெரேரா, இரண்டாம் உப தலைவர் செந்தில்நாதன், பொதுச் செயலாளர் சமில விதானகே, பொருளாளர் ஹர்ஷ கயான், அச்சகத்தார் சங்கத்தின் அங்கத்தினர்கள், பங்குதாரர்கள், ஏற்பாட்டு குழுவினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை அச்சகத்தார் சங்கம் (SLAP) என்பது நாட்டின் அச்சுத் தொழில்துறையினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகபூர்வ அமைப்பாகும்.  1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தச் சங்கம், இலங்கையின் அச்சுத் தொழிலைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் மற்றும் படிப்படியாக மேம்படுத்தவும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்த சங்கம், அச்சுத் துறையில் புத்தாக்கம், தொழில்முறைத் தரம் மற்றும் சிறந்து விளங்குதல் போன்றவற்றைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22