மஹாரகம நாவின்ன சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for வாகன விபத்து virakesari

இதேவேளை, அதில் ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மாணவர்களே இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்றிரவு 11.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலங்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று, மீண்டும் பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டி, மோட்டார் வாகனமொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த பஸ் வண்டியில் 65 மாணவர்கள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விபத்து தொடர்பில் பஸ் மற்றும் மோட்டார் வாகன சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.