கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

22 Feb, 2026 | 08:32 AM
image

காலி - நெலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யத்தேஹிகந்தவத்த பகுதியில் நேற்று சனிக்கிழமை (21) காலை இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மொரவக்க பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த பெண், உயிரிழந்தவரின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வந்த நிலத்தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 49 வயதுடைய சந்தேகநபர் நெலுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக மொரவக்க வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது. நெலுவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 15:42:44
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தை சிறப்பாக...

2026-05-21 14:22:50
news-image

போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 07 வருட...

2026-05-21 14:26:59
news-image

வெளியக காரணிகளால்தான் டொலரின் பெறுமதி உயர்கிறது...

2026-05-21 14:16:58