அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள் வேதனை: வயிற்றில் 10 செ.மீ கத்தரிக்கோல் கண்டுபிடிப்பு

21 Feb, 2026 | 09:29 PM
image

இந்தியாவின், கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (51). இவர், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு, 2021ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு, தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறைய வில்லை. ஆண்டு கணக்கில் மாத்திரை சாப்பிட்டு வந்ததால் அவருக்கு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.

இதனால் பயந்துபோன உஷா, சிறுநீரக மருத்துவரை அணுகினார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே-வில், அவர் வயிற்றில் 10 செமீ நீள கத்தரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பிறகு நடந்த விசாரணையில், 2021ம் ஆண்டு அறுவை சிகிச்சையின்போது, அவர் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம் தெரிய வந்தது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39