தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் சூமா சீனாவில் இடம்பெறவுள்ள “பிரிக்ஸ்”  மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட தூதுக்குழு பயணித்த விஷேட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் எரிபொருள் நிரப்பும் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பிரமுகர்கள் தங்கும் விஷேடப் பகுதியில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய உயர்அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிந்து இன்று அதிகாலை 1.40 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டனர்.