சுப்பர் 8 ஆரம்பப் போட்டியில் முன்னாள் சம்பியன் பாகிஸ்தானை நியூஸிலாந்து எதிர்த்தாடுகிறது

Published By: Vishnu

21 Feb, 2026 | 04:39 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்படும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் முதலாவது சுப்பர் 8 போட்டியில் முன்னாள் சம்பியன் பாகிஸ்தானை நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (21) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் தத்தமது குழுக்களில் தலா 3 வெற்றிகளை ஈட்டியதுடன் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தன.

ஏ குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான், இணை உறுப்பு நாடுகளான நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, நமிபியா ஆகிய அணிகளை வெற்றிகொண்டது.

ஆனால், தனது பரம வைரியான இந்தியாவிடம் 61 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

இதேவேளை டி குழுவில் தனது முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை இலகுவாக வெற்றிகொண்ட நியூஸிலாந்து, இணை உறுப்பு நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, நமிபியா ஆகியவற்றையும் இலகுவாக வெற்றிகொண்டது.

ஆனால், தென் ஆபிரிக்காவிடம் 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான ரி20 உலகக் கிண்ணம் மற்றும் சர்வதேச ரி20 கிரிக்கெட் ஆகிய இரண்டிலும் பாகிஸ்தானின் கை மேலோங்கி இருப்பதை அவதானிக்கலாம்.

இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட 8 சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் ஐந்திலும் நியூஸிலாந்து மூன்றிலும் வெற்றிபெற்றுள்ளன.

ரி20 உலகக் கிண்ணப் போட்டிகள் அடங்கலாக சர்வதேச ரி20 அரங்கில் இரண்டு அணிகளும் 49 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.

அவற்றில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

பாகிஸ்தான் 24 போட்டிகளிலும் நியூஸிலாந்து 23 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இரண்டு போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் இரண்டு அணிகளினதும் வீரர்களின் ஆற்றல் வெளிப்பாடுகள் கிட்டத்தட்ட சம அளவிலேயே இருக்கிறது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் சாஹிப்ஸதா பர்ஹான் 4 போட்டிகளில் ஒரு சதம். ஒரு அரைச் சதம் உட்பட 220 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். வேறு எவரும் 90 ஓட்டங்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் 8 விக்கெட்களையும் சய்ம் அயூப், ஷதாப் கான் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் நால்வர் அரைச் சதங்கள் குவித்துள்ளதுடன் டிம் சீஃபேர்ட் 2 அரைச் சதங்களுடன் 173 ஓட்டங்களையும் ஃபின் அலன் 137 ஓட்டங்களையும் க்லென் பிலிப்ஸ் 119 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் லொக்கி ஃபேர்கசன், மெட் ஹென்றி ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இத்தகைய சம அளவிலான ஆற்றல்களைக் கொண்ட இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான சுப்பர் 8 போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அணிகள்

பாகிஸ்தான்: ஷாஹிப்ஸதா பர்ஹான், சய்ம் அயூப், சல்மான் அலி அகா (தலைவர்), பாபர் அஸாம், கவாஜா நபே, ஷதாப் கான், உஸ்மான் கான், மொஹம்மத் நவாஸ் அல்லது பாஹீம் அஷ்ரப், சல்மான் மிர்ஸா, உஸ்மான் தாரிக், அப்ரார் அஹ்மத்.

நியூஸிலாந்து: டிம் சீஃபேர்ட், பின் அலன். ரச்சின் ரவிந்த்ரா, க்லென் பிலிப்ஸ், மார்க் சப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), ஜிம்மி நீஷாம், மெத் ஹென்றி, இஷ் சோதி, ஜெக்கப் டஃபி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27