யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீயில் விற்பனை நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விற்பனை நிலையத்திற்கு அண்மையில்  மண்ணெண்ணெய் வெற்றுக்கான் ஒன்று காணப்பட்டதாகவும் திட்டமிட்டு குறித்த கடைக்கு தீ வைக்கப்படிருக்கலாம் எனவும் சந்தேகிகப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.