வவுனியாவில் பல இளைஞர்களிடம் கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டுவந்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பூவரசங்குளத்தை சேர்ந்த சங்கரப்பிள்ளை விஸ்வதீபன் என்பரிடம் கொழும்பிலுள்ள கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து ரூபா.15,86000 பெற்று மோசடியில் ஈடுபட்ட முல்லைத்தீவை சேர்ந்த சிவனேஸ்ராஜா வினோத்குமார் ( 29வயது) என்பரை வவுனியா பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.