10,000 மைல் தொலைவில் வசித்த இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் தந்தையாகிய அதிசயம்

Published By: Raam

26 Jan, 2016 | 08:48 AM
image

சுமார் 10,000 மைல் தொலைவில் வசித்த இரட்டைச் சகோ­த­ரர்கள் ஒரே நாளில் சில மணித்­தி­யால இடைவெளியில் தந்­தை­யா­கி­யுள்ள அதி­சய சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

பிரித்­தா­னிய செஷி­யரில் வசிக்கும் ஸ்டீவன் (33 வயது) மற்றும் அவுஸ்­தி­ரே­லிய ஹார்வி பிராந்­தி­யத்தில் வசிக்கும் கேரத்­ (33 வயது) ஆகியோரே அவ்­வாறு ஒரே நாளில் தந்­தை­யா­கி­யுள்­ளனர்.

இவ்­வாறு இரட்டைச் சகோ­தரர்கள் ஒரே­ச­ம­யத்தில் தந்­தை­யா­வது 150,000 க்கு ஒன்­றென்ற வீதத்தில் இடம்­பெறும் அபூர்வ நிகழ்­வாகும்.

ஸ்டீவனின் மனைவி கதிக்கும் கேரத்தின் மனைவி கேட்­டுக்கும் பிர­சவ திக­தி­க­ளாக வேறு­பட்ட தினங்கள் எதிர்­வு­கூ­றப்­பட்­டி­ருந்த நிலையிலேயே இந்த அரிய பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right