இந்­தி­யா­வுக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நான்­கா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணித் தலை­வ­ராக லசித் மலிங்க செயற்­பட்டார். இந்தப் போட்­டியில் இந்­தியா நிர்­ண­யித்த 376 ஓட்­டங்­களை விரட்­டிய இலங்கை அணி 207 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்து 168 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

"போட்­டியில் வெற்­றி­பெற முடி­யா­விட்டால் அணியில் இருந்து என்ன பயன்" என்று லசித் மலிங்க தெரி­வித்தார். அதே­வேளை தனது உடற்தகு­தி­ கு­றித்தும் தானே கேள்வி எழுப்­பிக்­கொண்டார். 

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

"இந்­தியா மற்றும் சிம்­பாப்வே தொடர்­களில் நான் சிறப்­பாக பந்­து­வீ­ச­வில்லை, உடற்­த­குதி குறித்து என்­னிடம் பிரச்­சினை ஒன்று உள்­ளது என்று நினைக்­கிறேன், எதிர்­வரும் காலங்­களில் இந்த தோல்­வி­க­ளி­லி­ருந்து மீண்டு வர முயற்­சிப்பேன். 

அணியை வெற்­றி­பெற வைக்க முடி­யாது என்றால் நான் அணியில் இருப்­பதில் எந்தப் பலனும் இல்லை என்று எண்­ணு­ கின்றேன். அணியில் நான் நீடிப்­பதும் சரி­யல்ல என்று நினைக் கின்றேன். எதிர்வரும் காலங்களில் ஒரு முடிவுக்கு வருவேன் " என்றும் மலிங்க தெரிவித்தார்.