இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் ஐந்து அணிகள் பங்குபற்றும் சுப்பர் இருபதுக்கு 20 மாகாண கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாகின்றன. அதன்படி கொழும்பு கொமாண் டர்ஸ், காலி கார்டியன்ஸ், குருணாகலை வோரியர்ஸ், ஹம்பாந்தோட்டை ட்ரூபர்ஸ் மற்றும் கண்டி குரூஸடர்ஸ் ஆகிய அணிகளே பங்குபற்றுகின்றன.
இந்தத் தொடருக்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று இலங்கைக் கிரிக்கெட்டின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் தொடரின் மூலம் ஒரு திறமையான வீரரேனும் அடையாளம் காணக் கிடைத் தால் அது தான் எமக்கான வெற்றி என்று தெரிவித்தார். அதேவேளை எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணம் மற்றும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தையும் கருத்தில் கொண்டு, பயிற்சியாட்டத்திற்காகவும், புதிய இளம் வீரர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் இந்தத் தொடர் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் கொழும்பு அணிக்கு மிலிந்த சிறிவர்தன தலைவராக செயற்படுகிறார். அதேபோல் தினேஷ் சந்திமால் காலி அணிக்கும், மஹேல உடவத்த குருணாகலை அணிக்கும், திலகரத்ன தில்ஷான் ஹம்பாந்தோட்டை அணிக்கும், லஹிரு திரிமான்ன கண்டி அணிக்கும் தலைவர்களாக செயற்படுகின்றனர்.
இன்று ஆரம்பமாகவிருக்கும் இத் தொடரின் முதல் போட்டியில் மிலிந்த சிறிவர்தன தலைமையிலான கொழும்பு அணியும் தில்ஷான் தலைமையிலான ஹம்பாந்தோட்டை அணி யும் மோதுகின்றன.இத் தொடரின் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 5ஆம் திகதி நடைபெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM