இலங்கை விமானப்படையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி சைக்கிள் சவாரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் 

18 Feb, 2026 | 05:17 PM
image

இலங்கை விமானப்படையானது எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதியன்று தனது 75வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு கோல்ஃப், சைக்கிள் சவாரி உள்ளிட்ட பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

"வான்பரப்பினை  பாதுகாப்போம் " என்ற குறிக்கோளுடன், இலங்கை விமானப்படை 75 ஆண்டுகளாக தாய்நாட்டிற்கான தனது பணியை சிறப்பாக நிறைவேற்ற வந்துள்ளது . 1948 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியன்று இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்த நாட்டில் ஒரு விமானப்படையை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதைய அரச தலைவர்களின் முயற்சியினால் 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதியன்று ரோயல் சிலோன் விமானப்படை நிறுவப்பட்டது.

75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்,எதிர்வரும்  மார்ச் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இரத்மலானை விமானப்படை தளத்தில் வான் சாகசங்கள்  மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட கல்விக் கண்காட்சியுடன் மாபெரும்  கண்காட்சி  நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரின் எதிர் பார்ப்பையும்  பெற்ற விமானப்படை சைக்கிளோட்ட போட்டி   இந்தவருடம் 27 ஆவது  தடவையாக  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு போட்டியாளர்களின் பங்கேற்புடன் பெப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 01 ஆகிய திகதிகளில்  நடைபெறவுள்ளது.

இலங்கை விமானப்படையானது இலங்கை சைக்கிள் ஓட்டப்பந்தைய சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் விமானப்படை சைக்கிள் சவாரி தொடருக்கு இந்த முறை   டொயோட்டா நிறுவனத்தின் Verus Analytics (Pvt) Ltd, மற்றும் அபான்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை பிரதான அனுசரணையாளர்களாக  செய்லபடுகின்றனர்.

மேலும் காஸ்மிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை காப்பீட்டு கூட்டுறவு, இலங்கை வங்கி, லைஃப் பாய் பிராண்டின் ஆகியவற்றின் கீழ் யூனிலீவர் ஸ்ரீ லங்கா, ஆசிய பெயிண்ட்ஸ் (காஸ்வே), மெட்ரோபொலிட்டன் டெக்னாலஜிஸ், தேசிய லொத்தர்  வாரியம், விட்டஜென் பிராண்டின்  மாலிபன் பிஸ்கட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சியட் கலானி ஹோல்டிங்ஸ் ஆகியனவும் இணை அனுசரையாளர்களாக பங்குபற்றுகின்றனர்.  

விமானப்படை சைக்கிள் சவாரியின் முக்கிய நோக்கம் இலங்கையில் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிப்பதும், சைக்கிள் ஓட்டுநர்களிடையே போட்டியை உருவாக்குவதும் ஆகும், மேலும் இந்த பந்தயம் தேசிய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் விதிகள் மற்றும் சர்வதேச தரநிலைகளின்படி நடத்தப்படுகிறது.

மேலும், விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிம்பொனி ஆஃப் விங்ஸ்" இசை நிகழ்ச்சி, விமானப்படை ஈகிள்ஸ் ராக் இசைக்குழு மற்றும் பிரபல பாடகர்களின் பங்கேற்புடன், மார்ச் 28 ஆம் திகதி  மாலை 7.00 மணிக்கு கொழும்பு நெலும்பொகுனவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த அனைத்து நிகழ்வுளும்  தற்போதைய விமானப்படைத் தளபதியான  எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்ர்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின்...

2026-03-15 01:31:22
news-image

பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு

2026-03-15 01:32:27
news-image

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில்...

2026-03-15 01:19:21
news-image

யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட...

2026-03-15 01:15:04
news-image

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ்...

2026-03-14 04:44:29
news-image

ஆதம் ஹில்மி குவித்த சதத்தின் உதவியுடன்...

2026-03-14 04:39:33
news-image

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர்...

2026-03-13 21:00:51
news-image

இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன்...

2026-03-13 21:06:05
news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39