ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம் ; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு

Published By: Digital Desk 3

18 Feb, 2026 | 05:10 PM
image

ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்ப்ரூக் அரசாங்க தரப்பு சட்டதரணிகள் காதலன் மீது 'கடுமையான கவனக்குறைவால் நேரிட்ட கொலை' என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அவர் மீது 09 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அனுபவக் குறைவு: போதிய அனுபவமில்லாத காதலியை மிகக் கடினமான குளிர்கால மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்றது.

காலதாமதம்: திட்டமிட்ட நேரத்தை விட 2 மணிநேரம் தாமதமாக மலையேற்றத்தைத் தொடங்கியது.

தவறான காலணி: பாறைகளும் பனியும் நிறைந்த பகுதிக்கு, பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் மென்மையான 'Snowboard boots'-களை காதலி அணிய அனுமதித்தது.

எச்சரிக்கையை மீறியது: மணிக்கு 74 கி.மீ வேகத்தில் காற்று வீசியபோதும், -20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் மலையேற்றத்தைத் தொடர்ந்தது.

உதவியை மறுத்தது: இரவு 10:50 மணியளவில் உதவிக்கு வந்த பொலிஸ் ஹெலிகொப்டரை நோக்கி அவசர சமிக்ஞை எதையும் காட்டாமல் பயணத்தைத் தொடர்ந்தது.

தொலைபேசி மௌனம்: பொலிஸார் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது தனது அலைபேசியை 'Silent' முறையில் வைத்தது.

பாதுகாப்பின்மை: காதலியை விட்டுப் பிரிவதற்கு முன் அவருக்கு முறையான பாதுகாப்பு உடைகளையோ அல்லது அவசர காலப் போர்வைகளையோ வழங்கத் தவறியது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு, எதிர்காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடும் கூட்டாளிகளுக்கு இடையிலான பொறுப்புணர்வை வரையறுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்," என ஆஸ்திரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காதலன் தரப்பு சட்டதரணி, "இது ஒரு திட்டமிடப்படாத துயரமான விபத்து மட்டுமே. இருவரும் சரிசமமான அனுபவத்துடனும், முழு விருப்பத்துடனமே இந்த மலையேற்றத்தைத் ஆரம்பித்தனர்," என வாதிடுகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46
news-image

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: ஊழியர்கள் அதிர்ச்சி...

2026-03-14 11:09:21
news-image

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல்...

2026-03-14 11:51:12
news-image

“எங்கள் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழி...

2026-03-14 10:45:41
news-image

மத்திய கிழக்கு பதற்றம் உலக அமைதிக்கு...

2026-03-14 10:34:36
news-image

ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு...

2026-03-14 10:10:12
news-image

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அதிரடி...

2026-03-14 10:13:21