அல­வத்­து­கொடை  பிர­தே­சத்தில் 15 வயது  சிறுவன் ஒருவன் 75,000 ரூபாய் பணத்தை  திருடி அப்­ப­ணத்தில்  மூன்று கைய­டக்கக் தொலைபேசிகள் மற்றும் அதற்­கு­ரிய துணைப்­பா­கங்­க­ளையும் கொள்­வ­னவு செய்­தி­ருந்த நிலையில் அல­வத்­து­கொ­டை­பொ­லிஸார் அவற்றை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் சந்­தேக நப­ரான சிறு­வ­னையும் கைது­ செய்­துள்­ளனர்.

அல­வத்­து­கொடை  பிர­தே­சத்தில் வீடு ஒன்றில்  அலு­மா­ரியில் வைக்­கப்­பட்­டி­ருந்த மேற்­படி 75,000 ரூபாய் பணத்தை  திரு­டியே கைய­டக்க தொலைபேசி­களும் உதிரிப்பாகங்­களும் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக  விசா­ரணை­க­ளி­லி­ருந்து  தெரிய வந்­துள்­ளது.

அல­வத்­த­கொடை எல்­லே­கடே  பிர­தே­சத்தில் அமைந்­துள்ள  வீடு ஒன்­றிற்கு  அடிக்­கடி  வந்து செல்லும்  15 வய­து­டைய  இச் சிறுவன் வழமை போல்  சம்­பவ தினமும் வந்­துள்­ள­துடன்  அதன் போதே­மேற்­படி வீட்டில் எவரும் இல்­லாத நிலையில் வீட்­டுக்குள் சென்று  75,000 ரூபா பணத்தை திருடிச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இது தொடர்­பாக  விசா­ரணை நடத்­திய  அல­வத்­து­கொடை பொலிஸார்  குறித்த சிறு­வனை கைது செய்­துள்­ள­துடன் அப் பணத்தில் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட மூன்று கைய­டக்க தொலைபேசி­க­ளையும்  உதி­ரிப்­பா­கங்­க­ளையும்   மிகுதிப் பணம்  ரூபா 30,900 யும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட  15 வயதுடைய  சிறுவனை கண்டி  நீதவான் முன் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.