விமானப்படையின் “கொமாண்டர்ஸ் கிண்ணம்” கோல்ஃப் போட்டி - 2026

18 Feb, 2026 | 05:07 PM
image

இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க் ஆகியன இணைந்து தொடர்ந்தும்  13வது முறையாக ஏற்பாடு செய்துள்ள 2026ஆம் ஆண்டுக்கான விமானப்படையின் “கொமாண்டர்ஸ் கிண்ணம்” ஆடவர் மற்றும்  பெண்கள் திறந்த கோல்ஃப் போட்டி, விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், திருகோணமலை துறைமுகத்திற்கு அருகிலுள்ள சீனன்குடா  ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்கில் இம்மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த கோல்ஃப் போட்டியில், விமானப்படையின் “கொமாண்டர்ஸ் கிண்ணத்துடன்” முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சிறந்த முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஈகிள்ஸ் சவால் கிண்ணத்துக்காகவும் போட்டியிடுவார்கள்.

அனுராதபுரம், கொக்கல மற்றும் சீனன்குடா ஆகிய பகுதிகளில்  அமைந்துள்ள விமானப்படையின் மூன்று கோல்ஃப் மைதானங்கள், விமானப்படையின் “கொமாண்டர்ஸ் கிண்ணம்”  கோல்ஃப் போட்டியின் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையின் ஒரு அம்சமான விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதன் மூலம்  இந்த தொடர் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த விமானப்படை நேரடி பங்களிப்பைச் செய்துள்ளது.

விமானப்படையின் “கொமாண்டர்ஸ் கிண்ணம்” கோல்ஃப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வு இம்மாதம் 21ஆம் திகதி மாலை விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டும், டயலொக் எண்டர்பிரைசஸ் விமானப்படை “கொமாண்டர்ஸ் கிண்ணம்” கோல்ஃப் போட்டித் தொடரின்  வெற்றியை உறுதி செய்வதற்கான முக்கிய அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14