இரத்­தி­ன­பு­ரியில் சிறு­மிகள் கர்ப்­ப­மாகும் வீதம் அதி­க­ரித்து வரு­வ­தாக இரத்தின­புரி அரச வைத்­தி­ய­சா­லையின் பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் கட்­டுப்­பாட்டு பிரிவு தெரி­வித்­துள்­ளது.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தை பொறுத்­த­வரை ஏனைய பகு­தி­களை விட தோட்டப் பகு­தி­க­ளிலும் இவற்­றுக்கு அண்­மித்த பகு­தி­க­ளிலும் இந்­நி­லைமை அதி­க­மாக காணப்­ப­டு­வ­தா­கவும்  இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லையின் இப்­பி­ரிவின் வைத்­திய அதி­காரி என்.உப­சேன குறிப்பிட்டார்.

இரத்­தி­ன­புரி மாவட்டம் தோட்­டங்கள் அதிகமாக உள்ள பகு­தி­யாக இனங்­கா­ணப்­ப­டு­கி­றது. இவற்­றிலும் தோட்­டங்­களை அண்­டிய பகு­தி­க­ளிலும் சிறு­மிகள் கர்ப்­ப­மாகும் வீதம் அதி­க­மாக காணப்­ப­டு­வ­துடன் அதனால் ஏற்­படும்  சமூக அழுத்­தங்­களின் கார­ண­மாக தற்கொலை செய்து கொள்ளும் வீதமும் அதி­கரித்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மேலும் தோட்­டப்­ப­கு­தி­களில் போதிய கல்­வியறிவின்மை, சுகா­தார வச­திக்­கு­றைவு, மது­பானத்துக்கு அடி­மை­யாதல்,  விழிப்­பு­ணர்­வின்மை போன்­றன  பெருந்­தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் இவ்வாறான  விடயங்களுக்கு  ஆரோக்கியமான அணுகுமுறைகள் அவசியம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.