நடிகர் ஆரி நடித்திருக்கும் 'ஃபோர்த் ஃப்ளோர்' படத்தின் இசை வெளியீடு

18 Feb, 2026 | 04:01 PM
image

நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஃபோர்த் ஃப்ளோர்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநரும், நடிகருமான சேரன் இசையை வெளியிட்டார்.

இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள ' ஃபோர்த் ஃப்ளோர் ' எனும் திரைப்படத்தில் ஆரி, தீப்ஷிகா, பவித்ரா , சுப்ரமணிய சிவா, 'தலைவாசல்' விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெ. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மனோ கிரியேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் . ராஜா தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் சேரன்- சுசீந்திரன்- விஜய் மில்டன், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், நடிகர்கள் பரத் - பிரஜின் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''இந்தத் திரைப்படம் ஹாரர் -திரில்லர்- கொமர்சல்- பல வகையினதான ஜேனர்களில் உருவாகி இருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான பரபரப்பான திரை அனுபவத்தை வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்' என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்